1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 2 மார்ச் 2021 (12:31 IST)

திருமா போட்ட கண்டீஷன்... சம்மதிப்பாரா ஸ்டாலின்?

திமுக - விடுதலை சிறுத்தைகள் தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.  

 
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை சில மணி நேரங்களாக நடந்த நிலையில் முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது என்று திருமாவளவன் பேட்டி அளித்தார். 
 
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்க திமுக முன் வந்துள்ளது. ஆனால் 3 பொதுத் தொகுதிகளையும் கேட்டு விடுதலை சிறுத்தைகள் திமுகவை வற்புறுத்துகிறது என தெரிகிறது. இதனால் திமுக - விடுதலை சிறுத்தைகள் தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது. 
 
விடுதலை சிறுத்தைகள் தனது கட்சியை சேர்ந்த 3 சமூக முக்கிய நிர்வாகிகளுக்கு தொகுதிகள் வழங்குவதற்காக இந்த கோரிக்கையை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.