ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 21 ஜனவரி 2020 (06:29 IST)

காங்கிரஸை விட திக தான் திமுகவுக்கு தலைவலியா? துக்ளக் அட்டைப்படத்தால் பரபரப்பு!

துக்ளக் விழாவில் ரஜினி பேசியதை பெரிதுபடுத்தாமல் விட்டிருந்தால் கூட பிரச்சனை இந்த அளவுக்குப் பெரிதாக இருக்காது. ஆனால் அதற்கு திகவினர் அவரது பேச்சுக்கு விளக்கம் கொடுக்க அந்த விளக்கங்கள் திமுகவிற்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது 

சமீபத்தில் இது குறித்து விளக்கமளித்த திக தலைவர் வீரமணி அவர்கள் ’1971 ஆம் ஆண்டு ராமர் படத்தை செருப்பால் அடித்டதால் தான் திமுகவுக்கு அதிக இடங்கள் கிடைத்து ஆட்சியை பிடித்தது’ என்று கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது 
 
திக தலைவர் வீரமணியின் இந்த பேச்சு இந்துக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்த கொந்தளிப்பு காரணமாக வரும் தேர்தலில் திமுகவுக்கு எதிராக இந்துக்களை வாக்குகள் திரும்ப வாய்ப்புள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இது குறித்து துக்ளக்கின் இந்த லேட்டஸ்ட் துக்ளக் இதழில் ‘காங்கிரசை விட திக தான் இப்போது நமக்கு பெரும் தலைவலியாக இருப்பார்கள் போல என துரைமுருகன் அவர்கள் முகஸ்டாலின் அவர்களிடம் சொல்வது போன்ற ஒரு அட்டைப்படத்தை போட்டுள்ளது இந்த அட்டை படத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது