திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 10 ஆகஸ்ட் 2024 (15:11 IST)

அதிமுகவின் திட்டங்களை நிறைவேற்றும் திமுக.! எஸ்.பி வேலுமணி விமர்சனம்.!!

sp velumani
அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை தான் திமுக அரசு தற்போது நிறைவேற்றி வருவதாக  முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி விமர்சித்துள்ளார்.
 
கோவையில் புதிதாக அமைக்கபட்டு நேற்று முதல்வரால்  திறக்கப்பட்ட உக்கடம் - ஆத்துபாலம்  மேம்பாலத்தை   முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 
பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை மாவட்டத்திற்க்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு திட்டங்களை கொடுத்தார் என்றும் அந்த வகையில் கோவை மக்களின் 25 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று உக்கடம் - ஆத்துபாலம் மேம்பாலம் அமைக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா   சட்டபேரவையில் அறிவித்தார் என்றும் கூறினார்.
 
Velumani
அதன் தொடர்ச்சியாக கூடுதல் நிதி ஒதுக்கி எடப்பாடி பழனிச்சாமி இந்த பாலம் கட்ட உறுதுணையாக இருந்ததாகவும் அவருக்கு கோவை மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றும் தெரிவித்தார். மேலும் இன்னும் இந்த பாலம் வேலை முழுமையாக முடியவில்லை என்பதால் அரசு விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கோவைக்கு அதிமுக அரசால் கொண்டு வந்த திட்டங்களை தான், திமுக அரசு திறந்து வைக்கிறது எனவும் எஸ்.பி வேலுமணி விமர்சித்தார். இதேபோல் கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்