வியாழன், 12 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (15:43 IST)

வசூலில் கலக்கிய தனுஷின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்

நடிகர் தனுஷ் நடித்து, இயக்கியுள்ள அவரின் 50 ஆவது படமான ராயன் கடந்த வாரம் வெளியான நிலையில் நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. படத்தில் தனுஷோடு சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் கலக்கியது. தனுஷின் 50 ஆவது படம் என்ற பிராண்டாடோடு வெளியான இந்த படத்தை ரசிகர்கள் லாஜிக் எல்லாம் பார்க்காமல் கொண்டாடினர். இன்னமும் சில திரையரங்குகளில் இந்த படம் ஓடிவரும் நிலையில் படத்தின் ஓடிடி வெளியீடு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ராயன் திரைப்படம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.