வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 4 ஜூன் 2019 (08:08 IST)

கருணாநிதி நூற்றாண்டு விழாவின்போது நான்தான் முதல்வர்: முக ஸ்டாலின் சபதம்

திமுக தலைவர் கருணாநிதியின் 96வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் அவருடைய் 100வது பிறந்த நாளின்போது திமுக ஆட்சியில் இருக்கும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் சபதம் ஏற்றுள்ளார்.
 
கருணாநிதியின் 96வது பிறந்த நாள் விழா நேற்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் முக ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் உள்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் உரையாற்றிய முக ஸ்டாலின் கூறியதாவது:
 
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் பெற்ற வெற்றி சாதாரண வெற்றி அல்ல, மகத்தான வெற்றி. இந்த தேர்தலில் 2 கோடியே 23 லட்சம் வாக்குகளை திமுக பெற்றதற்கு கலைஞரின் சக்தி தான் காரணம்
 
இன்னும் நான்கு ஆண்டுகளில் கலைஞரின் நூற்றாண்டு விழா வருகிறது. இந்த மேடையில் நான் சபதமேற்கின்றேன். கலைஞரின் நூற்றாண்டு விழாவின்போது திமுக தான் ஆட்சியில் இருக்கும். அவருடைய நூற்றாண்டு விழாவை ஆட்சி பொறுப்பில் இருந்து கொண்டாடுவோம் என அனைவரும் சபதம் ஏற்போம் என்று கூறினார்