வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 3 ஜூன் 2019 (13:31 IST)

கண்களாய் வரவேற்பாய்...புன்னகையால் பேசுவாய் - வைரமுத்து உருக்கமான ’டுவீட்’

தமிழர்களின் நெஞ்சத்தில் நிறைந்திருப்பவர் முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி இன்று அவரது பிறந்தநாள். திமுக கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், கலைஞர்கள் என சகல தரப்பு மக்களும் மகிழ்ச்சியுடன் கலைஞரின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் கலைஞர் இருந்த வரைக்கும்  அவருடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர் கவிஞர் வைரமுத்து. பல்வேறு மேடைகளில், பட்டிமன்றங்களில் கலைஞரின் புகழைப் பேசியுள்ளார். இலக்கியப்பதிவில் கலைஞரின் புகழைப் பற்றி எழுதியுள்ளார்.
 
முத்தமிழறிஞர் கலைஞரின் 96 வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்  சென்னை மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகில் கருணாநிதியின்  உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதால் இன்று(ஜூன் 3) அவரது பிறந்த நாளை முன்னிட்டு  கவிஞர் வைரமுத்து தன் அவரது நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.
 
இதனையடுத்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கலைஞர் குறித்து  கூறியுள்ளதாவது :
 
ஒருநாளும்
காத்திருக்கச் செய்ததில்லை.
கண்களால் வரவேற்பாய்;
புன்னகையால் பேசுவாய்;
பெருஞ்சிரிப்பூட்டிக்
கோபாலபுரம் குலுங்கச் செய்வாய்.
 
இன்று
கரைக்கு வந்தும்
ஏதுமின்றித் திரும்பும் 
அலையாகத் திரும்புகின்றேன். - இவ்வாறு பதிவிட்டுள்ளார்.