1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (18:26 IST)

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்படும்: ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஸ்டெர்லைட் ஆலைக்கு நிரந்தரமாக சீல் வைக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கலாமா என சமீபத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக பிரதிநிதிகள் கலந்து கொண்டு திறக்கலாம் என கருத்துக் கூறினர். இந்த கூட்டத்தில் கனிமொழி மற்றும் ஆர்எஸ் பாரதி கலந்து கொண்டு தங்களது கருத்தை பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் திமுகவின் கூட்டணி கட்சிகள் அனைத்துமே ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜனை உற்பத்திக்காக தற்காலிகமாக திறக்கலாம் என்ற கருத்து கூறி வந்த நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் திமுக ஆட்சி அமைந்ததும் சுப்ரீம் கோர்ட்டின் தற்காலிக அனுமதி முடிந்ததும் அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு நிரந்தரமாக இழுத்து மூடப்படும் என்று தெரிவித்துள்ளார் 
 
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தற்காலிகமாகத் இறக்க அனுமதி அளித்த திமுக தற்போது நிரந்தரமாக இழுத்து மூடி சீல் வைக்கப்படும் என கூறியிருப்பது முரண்பாட்டின் மொத்த உருவமாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்