செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 29 டிசம்பர் 2018 (07:33 IST)

திமுக பொதுச்செயலாளர் க அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி ?

திமுக வின் பொதுச்செயலாளரும் முதுபெரும் அரசியல்வாதியுமான பேராசிரியர் க அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்க்ப்படட்டுள்ளார்.

திமுக வின் பொதுச்செயலாளரும் கழகத்தின் மூத்த உறுப்பினருமான க அன்பழகன் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபகாலமாக வயது மூப்புக் காரணமாக சில உடல் நலப்பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார்.

அதனால் பொது இடங்களுக்கோ அல்லது அரசியல் நிகழ்வுகளுக்கோ வருவதைக் குறைத்துக் கொண்டார். கடைசியாக கலைஞர் சிலைதிறப்பு விழாவில் கல்ந்துகொண்டார். அதன் பின்னான அவரது பிறந்தநாள் விழாவில் கூட அறிவாலயம் வந்து தொண்டர்களை சந்திக்கவில்லை.

96 வயதாகும் அவருக்கு நெஞ்சில் தொற்றுப் பிரச்சனைகள் இருப்பதால் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இது குறித்து திமுக வின் டிவிட்டர் பக்கத்தில் ‘கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்களுக்கு 'Chest Infection' இருப்பதால் அவருக்கு சிகிச்சையளித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள். இரண்டு நாட்களில் பேராசிரியர் அவர்கள் உடல்நலம் பெற்று வீடு திரும்புவார்’ என தெரிவித்துள்ளனர்.