காங்கிரஸ் வெற்றி பெற பாடுபடுங்கள்: தொண்டர்களுக்கு திமுக அறிவுறுத்தல்..!
தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றிக்கு பாடுபடுமாறு திமுக தலைமை தெலுங்கானா மாநில திமுக தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் கிட்டத்தட்ட ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் இறுதி கட்ட பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ், பாஜக மற்றும் பிஆர்எஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அங்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றன.
இந்த நிலையில் திமுக தலைமை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றிக்கு பாடுபடுமாறு அறிவித்துள்ளது. தெலுங்கானாவில் உள்ள அனைத்து திமுக அமைப்புகளும் காங்கிரஸ் வெற்றிக்காக பாடுபடுமாறும் தேர்தல் பணி குழு அமைத்து காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து திமுகவினர் பணியாற்ற வேண்டும் என்றும் திமுக தலைமை தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றி செய்யுமாறு தெலுங்கானா திமுகவினருக்கு அக்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது, பிஆர்.எஸ் கட்சி தலைமைக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva