புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 31 அக்டோபர் 2019 (12:54 IST)

கூடுகிறது திமுக பொதுக்குழு; ஆட்சிமாற்றம் குறித்து ஆலோசனை?

ஒத்திவைக்கப்பட்ட திமுக பொதுக்குழு கூட்டம் நவம்பர் மாதம் நடைபெறும் என அக்கட்சி பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

திமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்தது. அக்டோபரில் இடைத்தேர்தல் அறிவிக்க இருந்ததால் கூட்டத்தை ஒத்திவைத்தது திமுக தலைமை. தற்போது தேர்தல் முடிந்து முடிவுகளும் வெளியாகிவிட்ட நிலையில் நவம்பர் 10ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடக்க இருக்கிறது.

மக்களவையில் வெற்றிப்பெற்ற போதிலும் இடைத்தேர்தலில் தோல்வியடைந்தது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் அடுத்த சட்டசபை தேர்தலில் திமுக பெருவாரியான வெற்றிபெறும் என்று எதிர்பார்த்து வந்த சூழலில், இடைத்தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் அடிக்கடி ஆட்சிமாற்றம் விரைவில் நடக்கும் என்றும் கூறி வந்தார். எனவே ஆட்சிமாற்றம் குறித்து முக்கியமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படலாம் எனவும் கூறப்படுகிறது. தமிழகமெங்கும் திமுக வெற்றிபெறுவதற்கான வியூகங்களை தனிப்பட்ட குழு ஒன்று அமைத்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது.