வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 15 மார்ச் 2020 (08:47 IST)

தைரியம் இருந்தால் இதை செய்யுங்கள்: இளமதி விவகாரம் குறித்து திமுக எம்பி!

இளமதி விவகாரம் குறித்து திமுக எம்பி!
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் இளமதி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. செல்வம் என்பவரை காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்த இளமதி என்பவர் திடீரென கடத்தப்பட்டதாக கூறப்பட்டது., இதனை அடுத்து இளமதியை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
 
இந்த நிலையில் நேற்று காவல் நிலையத்தில் தனது வழக்கறிஞருடன் இளமதி ஆஜரானார். மேலும் அவர் போலீசாரிடம் தன்னை யாரும் கடத்தவில்லை என்பவர் என்றும், தான் தன்னுடைய தாயாருடன் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
இந்த நிலையில் போலீசார் இளமதியை அவருடைய பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளார். மேலும் இளமதியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் திவிக தலைவர் கொளத்தூர் மணி, இளமதியின் கணவர் செல்வன் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இளமதி விவகாரம் குறித்து அவ்வப்போது தனது கருத்துக்களை தெரிவித்து வந்த திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் அவர்கள் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பெண் உரிமை மிரட்டபடுகிறது., சமூக நீதி மறுக்கபடுகிறது. தற்காலிக வெற்றி என நம்பும் கோழைகளிடம் கேட்கிறேன். தைரியம் இருந்தால் இளமதியை தனியாக பிரஸ்மீட் அனுப்புங்க. அப்போ உங்க முகத்திரை கிழிந்து, சாயம் வெளுக்கும் அதை கண்ணாடியில் பார்த்து ரசித்து சிரித்து கொள்ளுங்கள்
 
செந்தில்குமாரின் டுவீட் தற்போது வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. டாக்டர் செந்தில்குமார் கூறியதுபோல் இளமதியை தனியாக செய்தியாளர்களை சந்திக்க அவரது பெற்றோர்கள் அனுமதிப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்