செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 14 பிப்ரவரி 2024 (17:52 IST)

பிரதமர் மோடி போட்டியிடுவது தமிழகத்தின் இந்த தொகுதியில் தான்: திமுக எம்பி கணிப்பு..!

பிரதமர் மோடி தமிழ்நாட்டில் தான் போட்டியிடுவார் என்றும் அவர் கன்னியாகுமரியில் போட்டியிட அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் திமுக எம்பி செந்தில்குமார் கூறியுள்ளார்

திமுக எம்பி செந்தில்குமார்  ஊடகம் ஒன்று அளித்த பேட்டியில் பிரதமர் மோடி இந்த முறை கன்னியாகுமரி தொகுதியில் தான் போட்டியிடுகிறார், இது எனக்கு டெல்லியில் இருந்து கிடைத்த தகவல் என்று அவர் தெரிவித்தார்

மேலும் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் தான் அதிமுக இடம் பெறும் என்றும் சிவி சண்முகம், கேபி முனுசாமி, ஜெயகுமார் இந்த மூவரை தவிர மற்ற அனைவருக்கும் பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என்று தான் விருப்பம் என்றும் தெரிவித்தார்

அமித்ஷா போன்ற பவர்புல்லான அமைச்சர் அதிமுகவுக்கான கூட்டணி கதவுகள் திறந்து இருக்கிறது என்றெல்லாம் போகிற போக்கில் சொல்லி விட மாட்டார்கள், எங்களோடு வராமல் எங்கே செல்வார்கள் என்ற மிகுந்த நம்பிக்கை உடன் தான் டெல்லி வட்டாரம் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்

செந்தில்குமாரின் கணிப்பின்படி கன்னியாகுமரியில் பிரதமர் போட்டியிடுவாரா? பாஜக கூட்டணியில் அதிமுக இணையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Edited by Siva