Daily Horoscope
✕

அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு கொரோனா தொற்று உறுதி!

Written By siva
Updated: வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (20:39 IST)
திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு கொரோனா தொற்று உறுதி!
கொரோனா வைரஸால் தமிழகத்தில் மட்டும் தினமும் 5 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் இந்தியாவில் 70 ஆயிரம் பேர்களுக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் உலகம் முழுவதும் சுமார் இரண்டரை கோடி மக்களை பாதித்துள்ள கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்க மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் 
 
இந்த நிலையில் தமிழகத்தை பொருத்தவரை பொதுமக்கள் மட்டுமன்றி மக்கள் பிரதிநிதிகளையும் கொரோனா வைரஸ் விட்டுவைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
கொரோனா வைரஸ்க்கு கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமார் மற்றும் திமுக ஜெ அன்பழகன் ஆகியோர் பலியாகி உள்ளனர் என்பதும் 25க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் எம்பிக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அரக்கோணம் தொகுதி திமுக எம்பி ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு கொரோனா உறுதியாக இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா  உறுதியாகி உள்ளதாக தெரிகிறது இதனால் திமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

எல்லாம் காட்டு

சென்னையில் ரோட் ஷோ செய்யும் பிரதமர் மோடி!.. ஏற்பாடுகள் தீவிரம்..

டெல்லி காவல் அதிகாரி மீது பாலியல் புகார் கொடுத்த பெண் பத்திரிகையாளர் கைது! எதிர்க்கட்சிகள் கண்டனம்..

3 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு.. முழு விவரங்கள் இதோ..

போன வாரம் முழுவதும் பங்குச்சந்தை சரிவு.. இந்த வாரம் மீண்டு வந்ததால் நிம்மதி...

தனுஷின் இயக்கத்தில் இணைந்தாரா நாஞ்சில் சம்பத்?!.. அவரே சொன்ன விளக்கம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments