தமிழகத்தில் மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா!
தமிழகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என 25க்கும் மேற்பட்ட பதவியில் இருக்கும் விஐபிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் அவர்களில் ஒரு சிலர் மட்டும் அவ்வப்போது குணமாகி வீடு திரும்பி உள்ளனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு இருந்தது குறித்த செய்தியைப் பார்த்தோம் இதனை அடுத்து போக்குவரத்து துறை அமைச்சராக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி மகள் ஆகியோர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது
இந்த நிலையில் சற்று முன் வெளியான மற்றொரு செய்தியின்படி அரவகுறிசி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
இன்று ஒரே நாளில் ஒரு அமைச்சர் மற்றும் ஒரு எம்எல்ஏ ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது ஏற்படுத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது