செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 24 டிசம்பர் 2020 (07:20 IST)

சென்னை திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

சென்னை திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா
தமிழகத்தில் ஏற்கனவே ஒருசில எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள் உள்பட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது என்பதும் அவர்களில் பலரும் குணமாகி வீடு திரும்பினார் என்பதையும் பார்த்தோம். ஜெ. அன்பழகன், வசந்தகுமார் உள்பட ஒரு சிலர் மட்டுமே கொரோனாவுக்கு பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக எம்எல்ஏக்கள் எம்பிக்கள் ஆகியோர் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது சென்னை திமுக எம்எல்ஏ ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் 
 
சென்னை துறைமுகம் தொகுதி திமுக எம்எல்ஏ சேகர்பாபு அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தனக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு சேகர்பாபு கேட்டுக்கொண்டுள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில் மேலும் ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகத்தில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டி தாண்டி இருந்தாலும் கொரோனா வைரஸிலிருந்து குணமாணவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியை நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது