வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 18 ஜனவரி 2019 (13:57 IST)

கலைஞரிடம் 10 ரூபாய் வாங்க முடியவில்லை – திமுக தொண்டர்கள் வருத்தம் !

திமுக என்ற கட்சித் தொடங்கி 72 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த 72 ஆண்டுகளில் கலைஞர் இல்லாமல் முதல்முறையாக திமுகவினர் பொங்கல் பண்டிகையினைக் கொண்டாடியுள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு எப்போதும் பொங்கல் பண்டிகையின் அளவற்ற அபிலாஷை உண்டு. தான் ஆட்சியில் இருந்த காலத்தில்தான் முதன் முதலாகப் பொங்கல் பண்டிகையான தை மாதம் முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்தார்.

அதுபோலப் பொங்கல் பண்டிகையின் போது தன்னைப் பார்க்க வருபவர்களுக்கு பொங்கல் பரிசாக 10 ரூபாய் தாள் ஒன்றை அளிப்பார். திமுக வின் தற்போதையத் தலைவரான ஸ்டாலின் முதல் திமுக வின் கடைக்கோடி தொண்டன் வரை அனைவருக்கும் இந்த பத்து ரூபாய் பரிசுதான்.

ஆனால் கலைஞர் கையால் அந்த பத்துரூபாய் வாங்க வேண்டுமென்று 1000 ரூபாய் செலவு செய்து ஊரில் இருந்து சென்னைக்கு சென்ற தொண்டர்கள் கதையும் உண்டு. ஆனால் இம்முறை கலைஞர் இல்லாததால் அறிவாலயத்தில் பொங்கல் பண்டிகைகள் எளிமையான முறையில் நடந்து முடிக்கின்றன.

பொங்கல் கொண்டாட அறிவாலயம் வந்திருந்த தொண்டர்களும் பழையக் கதைகளைப் பேசிவிட்டு சோகமாக சென்றுள்ளனர்.