செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (10:59 IST)

இந்த பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்: துரைமுருகன் ஆவேச பேட்டி

ஐடி ரெய்டு போன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் திமுக அஞ்சாவது என்று சற்றுமுன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார்
 
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவ்வப்போது வருமானவரித் துறையினர் ரெய்டு செய்து வருகின்றனர். ஆளுங்கட்சியினர் ஒரு சிலரது வீட்டிலும் பெரும்பாலான எதிர்க்கட்சியினர் வீட்டிலும் இந்த ரெய்டு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீரென ரெய்டு செய்வதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகன் என்பவர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு செய்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
இந்த நிலையில் திமுகவினர்களை குறிவைத்து ஐடி ரெய்டு நடத்துவது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் ’திமுகவை ஐடி ரெய்டு கொண்டு மிரட்டலாம் என மத்திய அரசு நினைத்தால் அதைவிட அரசியல் அப்பாவித்தனம் வேறொன்றுமில்லை என்று கூறினார். மேலும் ஐடி ரெய்டு போன்ற பூச்சாண்டிக்கு பயப்படும் இயக்கம் திமுக அல்ல என்றும் இதை போன்ற பல பிரச்சனைகளை திமுக சந்தித்து உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்