வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 15 பிப்ரவரி 2021 (16:24 IST)

ராமர் கோயில் நிதியுதவி வசூல்… நன்கொடை அளித்த திமுக பிரமுகர்!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி வசூலிக்கப்படும் நிலையில் திமுக மாவட்ட செயலாளர் ஒருவர் நிதியுதவி அளித்துள்ளார்.

நீண்ட ஆண்டுகளாக பிரச்சினையில் இருந்து வந்த அயோத்தி விவகராம் முற்று பெற்று ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் கோலகலமாய் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கின. இந்நிலையில் கோயில் கட்டுவதற்காக இந்திய குடியரசுத்தலைவர் ஐந்து லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இது போல பாஜக பிரமுகர்கள் நிதியுதவி அளித்தும் நிதியுதவி அளிக்க சொல்லியும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தின் திமுக மாவட்ட செயலாளர் மஸ்தான் ராமர் கோயில் கட்ட நிதியுதவியாக 11000 ரூபாய் அளித்துள்ளார். இதை தமிழக பாஜகவினர் பெருமையாக சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.