திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : புதன், 7 ஜூன் 2017 (15:17 IST)

நியூஸ் பேப்பர் படிக்கும் கருணாநிதி: வைரலாகும் புகைப்படம்!

நியூஸ் பேப்பர் படிக்கும் கருணாநிதி: வைரலாகும் புகைப்படம்!

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். இதனால் அவரது சட்டசபை வைரவிழாவுக்கு கூட அவர் கலந்துகொள்ளவில்லை. இதனையடுத்து தற்போது அவரது புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.


 
 
திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் கடந்த 3-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினமும், அதற்கு முந்தைய தினமும் அவரது தற்போதைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியானது. இதனால் திமுக தொண்டர்கள் மிகவும் உற்சாகமடைந்தனர்.
 
இந்நிலையில் தற்போது கருணாநிதி செய்தித்தாள் ஒன்றை படிப்பது போல புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாக பரவி வருகிறது. சமீப காலமாக கருணாநிதி தனது நினைவாற்றலை இழந்து விட்டார். அவர் செயல்படும் நிலையில் இல்லை போன்ற சில தகவல்கள் பரவி வந்தது.
 
இந்நிலையில் தற்போது அவர் செய்தித்தாள் படிப்பது போல வெளிவந்துள்ள புகைப்படம் அவர் மீண்டும் பழைய நிலைமைக்கு வருவார் என்ற உற்சாகத்தை திமுகவினருக்கு அளித்துள்ளது.