Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா எதிரொலி: திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு!

Written By Prasanth Karthick
Updated: செவ்வாய், 17 மார்ச் 2020 (09:13 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளை தடுக்க முடக்கப்பட்டுள்ள நிலையில் திமுக பொதுக்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகள், ஷாப்பிங் மால்களை மூட உத்தரவிட்டுள்ளதால் பட வெளியீடுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மார்ச் 29ம் தேதி திமுக-வின் கட்சி பொது செயலாளர் மற்றும் பொருளாளருக்கான தேர்தல் நடைபெற இருந்தது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழகத்தில் அமலில் இருப்பதால் திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நடைபெற இருந்த பொது நிகழ்ச்சிகள், கூட்டங்களையும் ஒத்தி வைக்க மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

எல்லாம் காட்டு

முக ஸ்டாலினுக்கு Z பிரிவு பாதுகாப்பு வாபஸ்!.. தமிழக அரசு அதிரடி...

பட்டம் விடும்போது காற்றில் பறந்த இளைஞர்!.. ஒரே சிரிப்பு!.. வீடியோ பாருங்க!...

நேபாள வெள்ளம் எதிரொலி!.. இமயமலை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு!...

ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க!.. முடிவை மாற்றிய நேபாள அரசு!...

நேபாள வெள்ளம்.. பால்கனியில் நின்றவர்கள் தப்பித்தார்களா?!.. நடந்தது என்ன?...

அடுத்த கட்டுரையில்
Show comments