திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (07:48 IST)

விடிய விடிய காத்திருந்த தொண்டர்கள்: காவேரி மருத்துவமனை முன் பரபரப்பு

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 11 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக்கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்த நிலையில் திடீரென நேற்று மாலை அவருடைய உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இதனையடுத்து கருணாநிதியின் உடல்நிலை குறித்த செய்திகளை தெரிந்து கொள்ள திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன் குவிந்தனர்.
 
தொண்டர்கள் கூட்டம் அதிகமாகி கொண்டே இருந்ததால் நேற்று இரவு போலீசார்களின் வலியுறுத்தல் காரணமாக ஒருசிலர் வீட்டிற்கு திரும்பினர். ஆனால் பெரும்பாலான தொண்டர்கள் தலைவர் குறித்த நல்ல செய்திக்காக விடிய விடிய காத்திருந்தனர். இந்த நிலையில் இரவு சென்ற தொண்டர்கள் மீண்டும் இன்று காலை முதல் காவேரி மருத்துவமனை முன் குவியத்தொடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
காவேரி மருத்துவமனை முன் சுமார் 2000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும், எந்தவித அசம்பாவித சம்பவங்களுக்கு இடம் கொடுக்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.