வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 2 அக்டோபர் 2018 (15:18 IST)

ஹைட்ரோகார்பன் திட்டம் –திமுக நாளை ஆர்ப்பாட்டம்

தமிழகம் உள்ளிட்ட மொத்தம் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து திமுக நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஹைட்ரோகார்பன் இருக்கும் இடங்களைக் கண்டறியும் திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள எண்ணெய் வளங்களைக் கண்டறிந்து உற்பத்தி செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழநாட்டில் கதிராமங்கலத்தில் செயல்பட்டு வந்த் இத்திட்டத்தில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் இத்திட்டம் சுற்றுச் சூழலுக்கு ஆபத்தானது எனக்கூறிப் பல இடங்களில் போராட்டங்களை நடத்தினர். இதனால் தமிழகத்தின் கதிராமங்கலத்தில் நடைபெற்று வந்த ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது மீண்டும் இந்தியா முழுவதும் 55 மண்டலங்களை ஹைட்ரோகார்பன் எடுக்க இந்திய அரசு அறிவித்துள்ளது. அவற்றில் மூன்று மண்டலங்கள் தமிழகத்தில் உள்ளது. இந்த மண்டலங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் உரிமையை ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா நிறுவனங்களுக்கு இந்திய அரசு அளித்துள்ளது.

இந்நிலையில் நேற்று டெல்லியில் நடைபெற்றக் கூட்டத்தில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரா பிராதன் முன்ன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை எதிர்த்து நாடுமுழுவதும் கண்டங்கள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் மீண்டும் ஹைட்ரோகார்பன் திட்டம் அனுமதிக்கப்படுவதை எதிர்த்து தமிழக எதிர்க்கட்சியான திமுக நாளை திருவாரில் ஆர்ப்பாட்டம் நடத்தும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தற்போது தெரிவித்துள்ளார்.