கணவன் மனைவியாக குடும்பம் நடத்துகிறோம்: திருநாவுக்கரசர் கலகல!
காங்கிரஸ் மற்றும் திமுக கணவன் மனைவி போல் இணைந்து செயல்படுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு, காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றது முதல் கட்சி வேகமாக வெற்றி படிக்கட்டுகளில் ஏற தொடங்கிவிட்டது.
ராஜஸ்தானில் நடைபெற்ற சட்டசபை மற்றும் நாடாளுமன்ற இடைத்தேர்தல்களில் தோல்வியடைந்தது பாஜகவையும் மோடியையும் பாதித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வெற்றி மோடிக்கு பயத்தையும் பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், காங்கிரஸ் திமுகவும் கூட்டணியில் இணைந்து செயல்படுவதாகவும், காங்கிரஸும் திமுகவும் திருமணமாகி கணவன் மனைவியாக குடும்பம் நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.