வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 29 நவம்பர் 2018 (10:57 IST)

திமுக தோழமை கட்சிகளுடன் ஆலோசனைக்கூட்டம் தொடங்கியது

மேகதாது அணை சம்மந்தமாக திமுக சார்பில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
கர்நாடகா அரசு காவிரியில் 5வது அணையாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதலைப் பெற மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியது.
 
மேகதாதுவில் அணை கட்டுவது சம்மந்தமாக அனுப்பிய வரைவு அறிக்கைக்கு மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சகம் நேற்று ஒப்புதல் அளித்தது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
 
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இது சம்மந்தமாக ஆலோசிக்கவும் திமுக சார்பில் இன்று காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி அண்ணா அறிவாலயத்தில் தற்பொழுது மேகதாது அணை சம்மந்தமாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.