காலியாகும் தேமுதிக கூடாரம்: திமுகவில் இணைந்த தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ.
விருத்தாசலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக கட்சியில் இணைந்தார்.
தேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு பிறகு விருத்தாசலம் தொகுதியில் 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், முத்துக்குமார் தேமுதிக போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். இதனால் அவருக்கு 2016ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலிலும் விருத்தாசம் தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் தற்போது முத்துக்குமார் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். தேதிமுக கடந்த சட்டமன்ற தேர்தலி படு தொல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் மத்தியில் தேமுதிக கட்சி பெரிதாக வலம் வரவில்லை. இந்நிலையில் அதிமுக கட்சி மீதும் பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
தற்போடு எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக மேலும் தங்களது பலத்தை கூட்டி வருகிறது. அடுத்து தேர்தல் ஒன்று வந்தால் அதில் திமுக தான் என்ற நிலைக்கு வளர்ந்து வருகிறது. இருந்தாலும் ஓ.பி.எஸ். மீது மக்கள் அதிக நம்பிக்கையில் உள்ளதால். சசிகலா தரப்பு ஆட்சி இனி வருவது கடிணம்.