வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 7 மார்ச் 2019 (12:35 IST)

அதிமுகவா ? தனித்துப் போட்டியா ? - தேமுதிக அலுவலகத்தில் அவசர ஆலோசனை !

தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தி விஜயகாந்த் தலைமையில் இப்போது உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள மாநிலக் கட்சிகள், சமுதாயக் கட்சிகள் மற்றும் தேசியக் கட்சிகள் ஆகியவை எல்லாம் திமுக மற்றும் அதிமுக ஆகிய அணிகளில் இறங்கி தங்களுக்கான சீட்களைப் பெற்றுள்ளன. ஆனால் இன்னும் எந்தக் கட்சிகள் எங்கு போட்டியிடும் என்ற விவரம் இரண்டுக் கட்சிகளாலும் வெளியிடப்படவில்லை. ஆனால் தேமுதிக மட்டும் இன்னமும் எந்த முடிவையும் எடுக்காமல் அமைதியாக இருந்து வருகிறது.

நேற்று அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் மாநாடு நடைபெற்றதால் அதற்குள்ளாக தேமுதிக வைக் கூட்டணிக்குள் இழுக்க பாஜகவும் அதிமுகவும் போராடிப் பார்த்தனர். இடையில் தேமுதிக 4 சீட்டுகளுக்கு ஒத்துக்கொண்டதாக செய்திகளும் வந்தன. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த முடிவும் அறிவிககப்படவில்லை. மாலையில் நடந்த கூட்டணிக் கட்சிகளின் மாநாட்டிலும் தேமுதிக கலந்துகொள்ளவில்லை.

இதையடுத்து மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் நேற்று தேமுதிக சார்பில் எங்களிடம் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறி பரபரப்புகளைக் கிளப்பினார். அதனால் ஒரே நாளில் இரண்டு கட்சிகளோடும் தேமுதிக கூட்டணி பேரம் நடத்தியது முறையல்ல என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அதிமுக வும் இப்போது தேமுதிகவைக் கூட்டணிக்குள் கொண்டுவரலாமா என்ற யோசனையில் இருப்பதாகத் தெரிகிறது.

இதையடுத்து இப்போது தேமுதிக கட்சி அலுவலகத்தில் நிலையில், தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, மோகன்ராஜ் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்திற்கு பிறகு சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்படாலாம் எனத் தெரிகிறது. அதிமுகவுடன் அவர்கள் கொடுக்கும் சீட்களைப் பெற்றுக்கொண்டு கூட்டணி அமைக்கலாமா அல்லது தனித்துப் போட்டியிடலாமா என இந்தக் கூட்டத்தில் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதனால் இன்று தேமுதிக விடம் முக்கியமானத் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.