திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 9 ஜூலை 2016 (07:43 IST)

தேமுதிக நிர்வாகிக்கு கல்தா - விஜயகாந்த் அதிரடி

கரூர் மாவடட் தேமுதிக நிர்வாகி பஞ்சபட்டி பாலனை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
 
இது குறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் மாவட்ட அவைத் தலைவர் பஞ்சப்பட்டி கே.பாலன், தேமுதிகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும்  நீக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
 
தேமுதிக மாவட்ட நிர்வாகி ஒருவருக்கும், பாலனுக்கும் இடையே வரவு செலவு விவகாரம் தான் அவர் நீக்கத்திற்கு காரணம் என செல்லப்படுகிறது.
 
கிறார் என்றும் அவருடன் கட்சியினர் எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 
இதேபோல், கரூர் மாவட்டத் துணைச் செயலர்கள் மகாசங்கர், எம்.ஆர்.கே.செல்வகுமார் ஆகியோரும் பதவிகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.