தனித்து போட்டியிடுகிறது தேமுதிக: இன்று 140 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்!

புதன், 10 மார்ச் 2021 (07:24 IST)
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக கடந்த சில நாட்களாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது என்பதும் இந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நேற்று அந்த கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி, தேமுதிகவை தங்களுடைய கூட்டணியில் இணையுமாறு அழைப்பு விடுத்தது என்றும் ஆனால் அந்த அழைப்பை தேமுதிக ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் அதிரடியாக தேமுதிக தனித்துப் போட்டி என்ற முடிவை எடுத்துள்ளதாகவும் இதனையடுத்து 140 தொகுதிக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை தேமுதிக என்று வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் மற்றும் விஜய பிரபாகரன் ஆகிய 4 பேர் போட்டியிடும் தொகுதிகள் உள்பட 140 வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால் தேமுதிக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ள தேமுதிக, எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

எல்லாம் காட்டு

அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு நோட்டீஸ்! டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு..!

ஆபத்தான தெரு நாய்களை கருணைக்கொலை செய்யலாம்: சுப்ரீம் கோர்ட் அனுமதி!

தவெகவின் அடுத்த இலக்கு டெல்லி: மாநிலங்களவையில் தடம் பதிக்க தயாராகும் முதலமைச்சர் விஜய்!

கட்டணமில்லா பேருந்து வேண்டாம், நேரத்திற்கு வந்தால் போதும்: பேருந்து சேவை குறித்து பெண்மணியின் குமுறல்

திமுக தோல்விக்கு இந்த பேச்சு தான் காரணம்.. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு காங்கிரஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments