ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 8 ஜூலை 2023 (09:10 IST)

தீபாவளி பண்டிகைக்கான ரயில் முன்பதிவு தொடங்கும் தேதி: தென்னக ரயில்வே அறிவிப்பு..!

2023 ஆம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல விரும்பும் நபர்கள் ரயிலில் முன்பதிவு செய்வதற்கான தேதியை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 
 
இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 12ஆம் தேதி வர இருப்பதை அடுத்து அதற்கு முன்பு மூன்று மாதத்திற்கு முன்பு அதாவது ஜூலை 12 முதல் தீபாவளி டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 
 
எனவே தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்கள் ரயிலில் முன்பதிவு செய்ய ஜூலை 12ஆம் தேதி தயாராகிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் சுமார் 10 நிமிடத்தில் முடிந்து விடும் என்பதால் முன்பதிவு செய்பவர்கள் ஜூலை 12ஆம் தேதி காலையில் தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 
Edited by Mahendran