ஆட்டோ கட்டணங்கள் உயர்கிறதா? 2வது நாளாக ஆலோசனை!
ஆட்டோக்களின் கட்டணத்தை மாற்றியமைப்பது குறித்து தமிழக அரசு 2வது நாளாக சென்னையில் ஆலோசனை.
பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் விரைவில் புதிய ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்ய போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது.
ஆம், பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கருத்தில் கொண்டு ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி நிர்ணயம் செய்ய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஆட்டோ ஓட்டுனர்கள் கோரிக்கையை ஏற்று ஆட்டோ கட்டணங்கள் மாற்றியமைக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் ஆட்டோக்களின் கட்டணத்தை மாற்றியமைப்பது குறித்து தமிழக அரசு 2வது நாளாக சென்னையில் ஆலோசனை நடத்தி வருகிறது. நேற்று தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடைபெற்ற நிலையில் இன்று சென்னை, கோவை, திருச்சி, உள்பட 31 நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகளுடன் போக்குவரத்து துறை ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.