1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 14 மே 2018 (15:21 IST)

எடப்பாடி பழனிசாமியின் ஸ்டைல் வித்தியாசமானது: திண்டுக்கல் சீனிவாசன்!

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை விட தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி சிறப்பாக இருப்பதாக திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார். 
 
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடைவிழாவும் மலர் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஏற்காடு கலையரங்கத்தில் நடந்த தொடக்க விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார். 
 
அப்போது அவர் பேசியது பின்வருமாறு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆசிபெற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. 
 
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தபப்ட்டு வருகின்றன. ஜெயலலிதா கொடுத்ததை விட சிறப்பான நல்லாட்சியை எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு கொடுத்து வருகிறார்.
 
அம்மா காலத்திலேயே அமைச்சராக இருந்ததால் நல்ல டிரெயினிங் கொடுத்து மிக சிறப்பாக அவரை செதுக்கி இருக்கிறார்கள். ஒவ்வொரு முதல்வருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும் ஆனால் மக்களோடு மக்களாக பழகும் எடப்பாடி பழனிசாமியின் ஸ்டைல் வித்தியாசமானது. இனி எவருக்கும் இந்த ஸ்டைல் வராது என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.