புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 11 ஏப்ரல் 2019 (20:26 IST)

எனக்கு அம்மா-அப்பா வச்ச பெயர் போதும்: சவுகிதாரை கலாய்த்த தினகரன்

கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி, பாஜக தேசிய செயலாளர் அமித்ஷா ஆகியோர் உள்பட பெரும்பாலான பாஜகவினர் தங்களது பெயருக்கு முன் சவுகிதார் என்று போட்டுக்கொள்வதை வழக்கமாக்கியுள்ளனர். சவுகிதார் என்றால் பாதுகாவலன் என்று அர்த்தமாம். நாட்டை பாதுகாப்பவர்கள் நாங்கள் என்ற அர்த்தத்தில் பெயருக்கு முன்னர் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தபோது 'சவுகிதார் போன்று நீங்களும் பெயருக்கு முன்னாள் ஏதாவது போட விரும்புகின்றீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்தார். எனக்கு என்னுடைய அம்மா அப்பா வைத்த பெயரே போதும், அதில் மாற்றம் செய்ய விரும்பவில்லை. 
 
நாட்டின் பாதுகாவலர்கள் என்று பெயரை போட்டு கொண்டிருப்பவர்களுக்கு நாட்டின் உள்ளே என்ன வேலை? அவர்கள் எல்லோரும் பார்டருக்கு செல்லும் நாள் நெருங்கிவிட்டது' என்று கலாய்த்தார்.