’அந்த குண்டர்களை’ திரும்ப அதிமுகவில் ஏற்க மாட்டோம் - ராஜேந்திர பாலாஜி

RAJENDRABALAJI
Last Updated: புதன், 10 ஏப்ரல் 2019 (18:53 IST)
அனைத்துக் கட்சிகளும் வரும் மக்களவைத் தேர்தலுக்காக தீவிரமாக பிரசாரம் செய்து வாக்குகள் சேகரித்து வருகின்றனர். சமீபத்தில் திமுகவின் தாய்கழகமான திராவிர கழகத்தின் தலைவர் வீரமணி பொள்ளாச்சி சம்பவத்தை இந்துக்கடவுளான கிருஷ்ணரை தொடர்புபடுத்தி பேசினார். இதற்கு பலரும் எதிரிப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் விருதுநகர் நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் திறந்துவைத்தார். பின்னர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
பெரியகுளம் கதிர்காமு மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தினகரன் அணியில் இருப்பவர்கள் தவறானவர்கள் என்பதற்கு இதுவே சாட்சி. இனிமேல் தினகரன் அணியில் இருந்து வரும் குண்டர்களை அதிமுகவில் மாட்டோம்.
 
மேலும் திமுக, திக ஆகியகட்சிகள் இந்துக் கடவுளை அவதூராகப் பேசிவருகின்றன என்று தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :