செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 11 செப்டம்பர் 2017 (23:05 IST)

சசிகலா டிஸ்மிஸ் என்றால் ஆட்சியும் டிஸ்மிஸ்? பதிலடி கொடுக்க தினகரன் தயார்

அதிமுக பொதுகுழு நாளை கூட எந்தவொரு தடையும் இல்லை என்று நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது. எனவே தினகரன் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.. நாம் பார்த்து முதலமைச்சராக்கிய ஒருவரே நமக்கு எதிராக காய் நகர்த்துகிறார் என்று டிடிவி தினகரன் ரொம்பவே அப்செட் ஆகவுள்ளாராம்



 
 
இந்த நிலையில் நாளை நடைபெறும் பொதுக்குழுவில் நிச்சயம் சசிகலா கட்சியில் இருந்தும் பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் தூக்கியடிக்கப்படுவார் என்று தெரிகிறது. சசிகலா டிஸ்மிஸ் என்றால் தானாகவே தினகரனின் துணை பொதுச்செயலாளர் பதவியும் காலி என்றுதான் அர்த்தம்
 
இதனால் கடைசி ஆயுதமாக ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வைக்கும் வகையில் தனக்கு ஆதரவாக இருக்கும் எம்.எல்.ஏக்கள் மூலம் ஆட்சியை கலைக்க தினகரன் முடிவு செய்துவிட்டதாக அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஆனால் 4 வருட பதவியை எம்.எல்.ஏக்கள் துறக்க முன்வருவார்களா? என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்