புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 7 டிசம்பர் 2017 (18:30 IST)

பொதுச்செயலாளர் கையெழுத்து இல்லை: மதுசூதனனுக்கு இரட்டை இலை கிடைக்குமா?

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கக்கூடாது என்று தேர்தல் அதிகாரிகளிடம் தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம் செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொதுவாக அதிமுகவின் நடைமுறையின்படி சின்னம் ஒதுக்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் 2B என்ற படிவத்தில் கையெழுத்திட வேண்டும். ஆனால் மதுசூதனன் வேட்புமனுவில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரின் கையெழுத்து மட்டுமே உள்ளது. பொதுச்செயலாளர் கையெழுத்து இல்லாததால் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கக்கூடாது என்று தினகரன் ஆதரவாளர்கள் செந்தில்பாலாஜி மற்றும் வெற்றிவேல் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு அதற்கு பதிலாக  ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவியை பொதுக்குழு கூடி அங்கீகரித்துள்ளதாக அதிமுகவினர் தரப்பினர் பதிலளித்து வருகின்றனர். இதனால் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.