1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 21 ஜூலை 2017 (14:02 IST)

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் உடன் சேர முடிவு: மலையடிவாரத்தில் ரகசிய பேச்சுவார்த்தை!

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் உடன் சேர முடிவு: மலையடிவாரத்தில் ரகசிய பேச்சுவார்த்தை!

கடந்த மூன்று தினங்களாக தனது சொந்த ஊரில் உள்ள முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நேற்று மாலை தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர்  கோவில் மலையடிவாரத்தில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வருகின்றன.


 
 
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அதிமுக ஓபிஎஸ் அணி சசிகலா அணி என இரண்டாக பிரிந்தது. அதன் பின்னர் சசிகலா அணி எடப்பாடி பழனிச்சாமி அணி, தினகரன் அணி என இரண்டாக பிரிந்து அதிமுக தற்போது மூன்று அணியாக உள்ளது.
 
இதில் எடப்பாடி அணியில் இருந்து 37 எம்எல்ஏக்கள் தினகரன் அணிக்கு ஆதரவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த 37 பேரில் தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் போடி தொகுதியை தவிர மற்ற மூன்று தொகுதி எம்எல்ஏக்களான தங்கதமிழ்ச்செல்வன், ஜக்கையன், கதிர்காமு ஆகியோர் தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்களாக இருந்து வருகிறார்கள்.
 
இந்நிலையில் தினகரன் அணியில் உள்ள தங்கதமிழ்ச்செல்வனுக்கும், ஜக்கையன், கதிர்காமு ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மன வருத்தத்தில் உள்ள இந்த இரண்டு எம்எல்ஏக்களும் ஓபிஎஸ் அணியில் இணைய உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
இதனை அறிந்த ஓபிஎஸ் அந்த எம்எல்ஏக்களை ரகசியமாக மலையடிவாரத்துக்கு வர வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் கசிகின்றன. இதனையடுத்து அந்த எம்எல்ஏக்கள் விரைவில் ஓபிஎஸ் அணியில் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.