வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 8 ஜூலை 2017 (10:19 IST)

ஓங்கும் தினகரன் பலம்: ஆதரவு எம்எல்ஏ 36-ஆக உயர்வு!

ஓங்கும் தினகரன் பலம்: ஆதரவு எம்எல்ஏ 36-ஆக உயர்வு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தது. ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டு பிரிவாக இருந்த நிலையில் சசிகலா அணி மேலும் உடைந்து ஈபிஎஸ் அணி மற்றும் தினகரன் அணி என இரண்டானது.


 
 
சசிகலா அணியில் இருந்த 122 எம்எல்ஏக்களில் 34 பேர் தினகரன் அணியில் இருந்து வரும் நிலையில் தற்போது மேலும் இரண்டு எம்எல்ஏக்கள் தினகரன் அணிக்கு தாவியுள்ளார். இதன் மூலம் தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் 36 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
 
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ தென்னரசு நேற்று முன்தினம் திடீரென டிடிவி தினகரனைச் சந்தித்து தனது ஆதரவு தெரிவித்துள்ளார். இவர் ஈபிஎஸ் அணியில் இருந்து கொண்டு அமைச்சர் பதவி கேட்டதாகவும், அது கிடைக்காததால் அணி மாறியதாகவும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில் இன்று மீண்டும் ஓர் எம்எல்ஏ தினகரன் அணியில் சேர்ந்துள்ளார். மொடக்குறிச்சி எம்எல்ஏ சுப்பிரமணியன் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் மூலம் தினகரன் அணி எம் எல் ஏக்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. தினகரன் அணியில் 36 பேர் இருந்தாலும் ஆட்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால் இப்போதைக்கு ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.