புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 15 அக்டோபர் 2018 (16:52 IST)

அதிமுக- அமமுக இணைப்பு ஆணவத்தின் உச்சம்- தினகரன் மீது மாதவன் பாய்ச்சல்

அதிமுக விரைவில் தன்னுடைய அமமுக வோடு இணைக்கப்படும் எனக் கூறிய டிடிவி தினகரனுக்கு தீபாவின் கணவர் மாதவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தினகரன் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் இன்னும் ஓராண்டுக்குள் அதிமுக தன்னுடைய அமமுக கட்சியோடு இணைக்கப்படும் என கூறியிருந்தார். அந்த கருத்து அதிமுக தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதுகுறித்து அறிக்கை ஒன்றை எம்.ஜி.ஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்றக் கழக தலைவர் க.மாதவன் வெளிடிட்டுள்ளார். அந்த அறிக்கையில் பின்வருமாறு தினகரனுக்கு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ‘புரட்சி தலைவர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டு அம்மாவால் வளர்க்கப்பட்ட கழகத்தை, அம்மாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு அம்மாவின் மரணம் வரை கட்சியிலேயே சேர்த்துக் கொள்ளப்படாத ஒருவர் தான் ஆரம்பித்து ஒரு ஆண்டு கூட கட்சியோடு இணைப்பேன் என சொல்வது ஆணவத்தின் உச்சம். அவரின் இந்த கருத்து எம்ஜிஆர் மற்றும் அம்மாவின் தொண்டர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.’

’அம்மா இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் அவரது மரணம் குறித்த மர்மம் தெளியவில்லை. அம்மாவின் கூட இருந்தவர்களே பல உண்மைகளை மறைக்கின்றனர். தற்போது நடக்கும் கூத்துகளை எல்லாம் அம்மாவின் ஆண்மாவும் புரட்சித் தலைவரின் ஆண்மாவும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.’ எனக் கூறியுள்ளார்