வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 11 டிசம்பர் 2017 (20:30 IST)

சுயம்பு முதல்வர்: எடப்பாடியை அழகாய் கலாய்த்த தினகரன்!

சுயம்பு முதல்வர்: எடப்பாடியை அழகாய் கலாய்த்த தினகரன்!

தனது ஆதரவாளர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து பேசிய தினகரன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சுயம்பு முதல்வர் எனவும் ஓபிஎஸ்ஸை தர்ம யுத்தம் துணை முதல்வர் எனவும் எனவும் கலாய்த்து அவர்களை விமர்சித்தார்.
 
தனது ஆதரவாளர்கள் கைது குறித்து தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், நாங்கள் முறையாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தாலும், எங்களுடைய உள்ளூர் நிர்வாகிகளைக் குறிவைத்து குற்றம்சாட்டி காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.
 
நான் எங்கு ஓட்டு கேட்கச் சென்றாலும் அங்கெல்லாம் வந்து எங்களது கட்சிக் காரர்களை தீவிரவாதிகளைப் போல பிடிக்கின்றனர். குறிப்பாக சம்பத் எனும் காவல்துறை ஆய்வாளர் இந்த செயலில் ஈடுபட்டு வருகிறார்.
 
நேற்று முன்தினம் நாங்கள் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த இடத்தில் முதல்வர் வருகிறார் என்று சொன்ன காரணத்தால் பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்தோம். ஆனால், அதன்பிறகு அவர்கள் நேரத்தை மாற்றி விட்டார்கள். இன்றும் அதேபோல், சுயம்பு முதல்வரும், தர்மயுத்தம் துணைமுதல்வரும் வருகிறார்கள் என காவல்துறை ஆணையர் கூறியதால் நாங்கள் பிரச்சாரம் செய்ய இருந்த இடத்தை விட்டுக் கொடுத்தோம் என கூறினார்.