வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 17 மார்ச் 2017 (17:13 IST)

வேகமெடுக்கும் சொகுசு கார் வழக்கு: ஆர்.கே.நகரில் தினகரன் போட்டியிடுவதில் சிக்கல்?

வெளிநாட்டிலிருந்து சொகுசு கார் இறக்குமதி செய்து வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் டிடிவி தினகரன் இன்று சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.


 

சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த 1994ம் ஆண்டு லண்டனில் இருந்து லெக்சஸ்  என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார். அந்த காருக்கு முறையான வரி செலுத்தவில்லை. காரணம் உபயோகப்படுத்தப்பட்ட பழைய கார் என கூறி வரி ஏய்ப்பு செய்தார். விசாரணையில் அது புதிய கார் என்றும், ரூ.1 கோடி வரை நடராஜன் மற்றும் தினகரன் ஆகியோர் வரி மோசடி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம், நடராஜன் உட்பட நான்கு பேருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை வித்தித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு தற்போது சென்னை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் இன்று அதிமுக துணை பொதுச் செயலாளரும்,ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளருமான தினகரன் நீதிமன்றத்தில் ஆஜரானார். இவ்வழக்கில் தினகரன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டால், அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.