நடிகர் விவேக் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பா?

Sugapriya Prakash| Last Modified சனி, 17 ஏப்ரல் 2021 (07:50 IST)
நடிகர் விவேக் மரணத்திற்கும்  சமீபத்தில் அவர் போட்டுக்கொண்ட கொரோனா தடுப்பூசிக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என மருத்துவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். 

 
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்தார் என்றும் உடனடியாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் கடந்த 15 அம் தேதி கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 
 
இதனிடையே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் நேற்று செய்தி வெளியிட்டன. இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.  இவரது திடீர் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசிக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என சந்தேகம் எழுந்தது. 
 
இது குறித்து, அவர் சிகிச்சை பெற்று வந்த தனியார் மருத்துவமனை இயக்குநர், நேற்று காலை 11 மணியளவில் சுயநினைவிழந்த நிலையில், நடிகர் விவேக் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு அவரது குடும்பத்தால் கொண்டு வரப்பட்டார். பின்னர் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. 
 
அதன் பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் எக்மோ சிகிச்சையில் விவேக் கண்காணிக்கபட்டு வந்தார். இது மாரடைப்பு அதிர்ச்சியுடன் கூடிய இதய குறைபாடு பிரச்னை. இதற்கும் கோவிட் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என்று என தெரிவித்தார். இந்த தகவல் நேற்று அவர் சிகிச்சை பெற்று வரும் போதே தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :