1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 28 அக்டோபர் 2024 (15:00 IST)

ரஜினிக்கு பதிலாக விஜய்யை பாஜக களமிறக்கியுள்ளது: சபாநாயகர் அப்பாவு..!

ரஜினி அரசியலுக்கு வராததால், அவருக்கு பதிலாக விஜய்யை பாரதிய ஜனதா கட்சியில் களமிறக்கியுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 
 
நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையிலிருந்து சபாநாயகர் அப்பாவு தண்ணீரை சாகுபடிக்காக திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஏற்கனவே பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்துள்ளனர்; அதேபோல் நடிகர் விஜய்யும் கட்சி ஆரம்பித்துள்ளார். எனவே, அவருக்கு எனது வாழ்த்துக்கள்," என்றார்.
 
விஜய் கட்சியின் புஸ்ஸி ஆனந்த் பாஜக தலைவருடன் நெருக்கமாக இருப்பதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடனும் நெருக்கம் கொண்டுள்ளார் என தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. விஜய், ஏ டீ இல்லை, பி டீம் இல்லை" என கூறியதைக் கேள்விப்படும்போது சந்தேகம் ஏற்படுகிறது. புதிய கட்சி தொடங்கும்போது, திமுகவை விமர்சனம் செய்வதை தவிர்த்திருக்கலாம் 
 
புஸ்ஸி ஆனந்த் ஒரு கிரிமினல் என விஜய்யின் தந்தையே கூறியுள்ளார். ஒரு கிரிமினலை எப்படி ஒரு கட்சியின் பொது செயலாளர் ஆக்கினார்கள் என்று தெரியவில்லை.
 
குற்றவாளியைப் போல விஜய் வருமானவரி சோதனையில் சிக்கியபோது, திமுகயே அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தது. "குற்றம் இருப்பதால்தான் அவரிடம் விசாரணை நடந்தது; எனவே, மற்றவர்களை குறை கூறும் போது உண்மையாக இருக்க வேண்டும்," என சபாநாயகர் தெரிவித்தார்.
 
மேலும், பாஜகவில் இருந்து ரஜினியை அரசியலுக்கு கொண்டு வர முயற்சித்ததாகவும், அவர் வரவில்லை என்பதால், அவருக்கு பதிலாக விஜய்யை ஏற்பாடு செய்திருக்கலாம் என்ற சந்தேகம் தமக்கிருக்கிறது என்றும் சபாநாயகர் அப்பாவு கூறினார்.
 
 
Edited by Mahendran