பாஜகவில் இணைந்த 2000 அஜித் ரசிகர்கள்... அடிச்சு தூக்கும் தமிழிசை
சில நாட்களுக்கு முன்னர் அஜித் ரசிகர்கள் சிலர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தலைமையில் பாஜகவில் இணைந்தனர். இதனால், அஜித் உடனே ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
அதில், எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை அதில் விருப்பமும் இல்லை.நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரைப்படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக் கூடாது என்பதில் தீவிரமாக இருப்பவன்.
என்னுடைய இந்த முடிவுக்கு பிறகு கூட சில அரசியல் நிகழ்வுகளுடன் என் பெயரையும், என ரசிகர்கள் பெயர்களையும் சம்பந்தப்படுத்தி சில செய்திகள் வெளியாகிறது. எனது தொழில் சினிமா. எனக்கு அரசியலில் விருப்பம் இல்லை என தெளிவாக தெரிவித்தார்.
இதனையடுத்து தமிழைசை நாங்கள் அஜித்தை பாஜகவில் இணைய அழைக்கவில்லை என தெரிவித்தார். எச்.ராஜா அஜித் அரசியல்தான் வேண்டாம் என்றாரே தவிற பாஜகவை எதிர்க்கவில்லை. நாங்கள் ஒன்றும் அஜித்துக்கு நூல் போடவில்லை என பேசி சில சர்ச்சைகள் வெடித்தது.
இந்த விவகாரம் அமைத்திக்கு வருவதற்குள் தமிழிசை மீட்டிங் ஒன்றில் பாஜகவில் 2000 அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்துள்ளதாக கூறியுள்ளதாக செய்தி ஒன்று இணையத்தில் உலாவி வருகிறது.
அதோடு, நல்ல நடிகரின் ரசிகர்களாகிய நீங்கள் இனி நல்ல தலைவரை பின்பற்றுங்கள் என அறிவுரை கூறியதகாவும் உலா வரும் செய்தி தெரிவிக்கிறது, இந்த செய்திக்கு என்னென்ன எதிர்ப்பு வரப்போகுதோ....?