Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ.வை பொதுச்செயலாளர் ஆக்கியதே நாங்கள்தான் - திவாகரன் அதிரடி

Written By Murugan
Updated: வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (09:30 IST)
தமிழக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பொதுச்செயலாளர் ஆக்கியதே நாங்கள்தான் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.


 

 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனை நியமித்தது சட்டவிரோதம் எனவும், அவர் சமீபத்தில் நியமனம் செய்த நிர்வாகிகள் பட்டியல் செல்லாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
இதுகுறித்து, சசிகலாவின் சகோதரரான திவாகரன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போது “ எம்.ஜி.ஆர் மறைந்த போது அதிமுகவிற்கு ஏற்பட்ட நெருக்கடியை போல் தற்போது ஏற்பட்டுள்ளது. அப்போது, 16 மாவட்ட செயலாளர்களிடம் கையெழுத்து வாங்கி, ஜெயலலிதாவை பொதுச்செயலாளர் ஆக்கியதே நாங்கள்தான்.  தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு இன்னும் மூன்று மாதங்களில் தீர்வு காணப்படும். வருகிற 14ம் தேதி மேலூர் பொதுக்கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகும்” என அவர் கூறினார்.

எல்லாம் காட்டு

டெல்லிக்கு போராட சென்ற தமிழக விவசாயிகள் நாக்பூரில் தடுத்து நிறுத்தம்.. கைது செய்யப்பட்டார்களா?

எம்பிபிஎஸ் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு எப்போது? முக்கிய தகவல்..

கொளத்தூர் தொகுதி வாக்குகள் சரிபார்க்கும் பணி.. திடீரென புறக்கணித்த திமுக முகவர்கள்...!

ஆறுகளில் தண்ணீர் இல்லை.. களையிழந்த ஆடிப்பெருக்கு.. பொதுமக்கள் ஏமாற்றம்..

சபரிமலை செல்லும் பக்தர்கள் மறுபரிசீலனை செய்யவும்.. தமிழக அரசு வலியுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்
Show comments