Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சியர் அலுவலக ஊழியர்களை மீட்கவே துப்பாக்கிச்சூடு : டிஜிபி கஜேந்திரன்

Updated: திங்கள், 2 ஜூலை 2018 (17:48 IST)
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்களை காப்பாற்றவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என டிஜிபி டி.கே.ராஜேந்திரன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து ஏன் சிபிஐ விசாரிக்கக் கூடாது என கேள்வி எழுப்பியிருந்தார். 
 
இந்நிலையில் நீதிமன்றத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்த தமிழக காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் அளித்த விளக்கத்தில் “தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தின் 277 ஊழியர்களை மீட்கவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதேபோல், ஸ்டெர்லைட் குடியிருப்பில் இருந்த 150 குடும்பத்தினருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டதாலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இது தொடர்பான சிபிசிஐடி விசாரணை நியாயமான முறையில் நடைபெற்று வருகிறது. எனவே, சிபிஐ விசாரணை தேவையில்லை” என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

எல்லாம் காட்டு

ஃபிரிட்ஜ் வெடித்து குடும்பமே பலி!.. 4 பேர் உயிரிழந்த சோகம்!...

ஆ ராசா, சேகர்பாபுவை அடுத்து இன்னொரு திமுக பிரபலம் மீதும் வழக்கு.. தவெக அரசு அதிரடி...

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தகராறு.. எம்டிசி பேருந்து ஓட்டுநர் பரிதாப பலி..

நள்ளிரவில் வெடித்த ஃபிரிட்ஜ்... தூக்கத்திலேயே தீயில் கருகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்

தவெக ஆட்சியின் முதல் டெண்டர் முறைகேடு.. அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு...

அடுத்த கட்டுரையில்
Show comments