திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 30 ஜூன் 2018 (19:43 IST)

டுவிட்டரில் டிரெண்ட் ஆன 'அன்றே சொன்ன ரஜினி'

சமீபத்தில் தூத்துகுடி சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது, 'இது ஒரு புனித போராட்டம். ஆனால் அதே நேரத்தில் இந்த போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி போராட்டத்தை வன்முறையாக மாற்றிவிட்டனர். போராட்டம் செய்யும் பொதுமக்கள் இந்த விஷயத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும்' என்று கூறினார்.
 
ஆனால் ரஜினி சொன்னதை வேண்டுமென்றே பல அரசியல் தலைவர்கள் 'போராட்டம் செய்தவர்களை ரஜினி சமூக விரோதிகள் என்று கூறியதாக திரித்து ரஜினிக்கு கண்டனம் தெரிவித்தனர். இதில் கமல்ஹாசனும் விதிவிலக்கல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்து வரும் விசாரணை ஆணையத்திடம் அந்த பகுதி மக்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அதில் ஒரு குறிப்பிட்ட இயக்கத்தின் பெயரை கூறி, அந்த இயக்கத்தினர் தான் மீனவ இளைஞர்களை மூளைச்சலவை செய்ததாகவும், தங்களுக்கு 144 தடை உத்தரவு என்றால் என்னவென்றே தெரியாது என்றும் வன்முறைக்கு காரணமே அந்த இயக்கத்தினர்கள் தான் என்றும் கூறியுள்ளனர். 
 
இதனையடுத்து ரஜினி சொன்ன சமூக விரோதிகள் யார் என்பது இப்போது தெரிந்துவிட்டது. இதனால் சமூக  வலைத்தளத்தில் 'அன்றே சொன்ன ரஜினி' என்ற ஹேஷ்டேக்கை ரஜினி ரசிகர்கள் உருவாக்கி அதை டிரெண்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இதுவரை இந்த ஹேஷ்டேக்கில் சுமார் 70 ஆயிரம் டுவீட்டுக்களுக்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது