வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 6 ஜனவரி 2024 (19:28 IST)

நடத்துனர் மீது துறை ரீதியாக நடவடிக்கை- போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்

Kilambakkam
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 2 மணி நேரமாக பேருந்துகள் இல்லை என தந்தி செய்தி தொலைகாட்சியில் வெளியிடப்பட்ட ஒளி செய்திக்கு மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அவர்களின் விளக்கம்  அளித்துள்ளது.

அதில்,

''மாநகர் போக்குவரத்து கழகத்தின் மூலம் கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து 298 பேருந்துகள் மூலம் 1,691 பயண நடைகள் இயக்கப்படுகிறது.
 
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வழியாக 202 பேருந்துகள் மூலமாக 2,386 பயண நடைகள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வழியாக 4,077 பயண நடைகள் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.
 
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மைலாப்பூர் வழியாக பிராட்வே வரை தடம் எண்.21G -ல் 164 பயண நடைகள் இயக்கப்படுகிறது. இன்று (06.01.2024) காலை மாரத்தான் போட்டியானது, போர் நினைவுச்சின்னம் முதல் காமராஜர் சாலை வழியாக பெசன்ட் நகரில் உள்ள ஆல்காட் பள்ளி வரை நடைபெற்றதால், அவ்வழியாக இயக்கப்படும் சில பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சற்று காலதாமதமாக வந்தபோதும் மாற்று பேருந்துகள் மூலம் மைலாப்பூருக்கு பேருந்து இயக்கப்பட்டு சரிசெய்யப்பட்டது.
 
மேலும், நடத்துனர் பொதுமக்களிடம் பேசிய விதம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இல்லாததால் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது''என்று தெரிவித்துள்ளது.