1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: சனி, 21 அக்டோபர் 2017 (17:32 IST)

'மெர்சல்' பிரச்சனையால் தமிழக அரசுக்கு கிடைத்த பயன்

கடந்த தீபாவளி அன்று திரைக்கு வந்த விஜய்யின் 'மெர்சல்' திரைப்படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்ததால் ஒரு வாரம் படம் தேறுவதே கடினம் என்ற நிலை இருந்தது.



 
 
ஆனால் தமிழிசை செளந்திரராஜன் புண்ணியத்தில் 'மெர்சல்' தற்போது சூப்பர் ஹிட்டை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. பாஜக தமிழக தலைவர்கள் இந்த படத்திற்கு இலவச விளம்பரம் செய்ததால் இன்றும் நாளையும் சென்னை உள்பட பெரிய நகரங்களில் உள்ள அனனத்து தியேட்டர்களிலும் ஹவுஸ் புல் ஆகிவிட்டது.
 
இந்த நிலையில் மெர்சல் பிரச்சனையால் தமிழக மக்களும் ஊடகங்களும் டெங்கு காய்ச்சலை சுத்தமாக மறந்துவிட்டனர். மீடியாக்களும் டெங்குவை மறந்துவிட்டு 'மெர்சல்' பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தலைப்பு செய்திகளை வெளியிட்டு வருவதால் தமிழக அரசு ஒரு பெரிய பிரச்சனையில் இருந்து தற்காலிகமாக தப்பிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.