திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: சனி, 21 அக்டோபர் 2017 (15:26 IST)

ராகுல்காந்தியை அடுத்து 'மெர்சல்' படத்திற்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திற்கு ரிலீசுக்கு முன்னர் ஏற்பட்ட பிரச்சனையின்போது ஒருவரும் கருத்து தெரிவிக்காத நிலையில் ரிலீசுக்கு பின்னர் பாஜக ஏற்படுத்திய பிரச்சனைக்கு கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து விட்டன. 



 
 
டெல்லியில் இருந்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தியே, பிரதமரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பிய பின்னர் அதன் கூட்டணி கட்சியான திமுக இந்த பிரச்சனையில் தலையிடாமல் இருக்க முடியுமா?
 
ஆம், சற்றுமுன்னர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் 'மெர்சல்' படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். பேச்சுரிமைக்கும் கலையுலக சுதந்திரத்திற்கும் திமுக என்றுமே ஆதரவாக இருக்கும். விமர்சனங்களை அடக்க பாஜக முயற்சிப்பது ஜனநாயக கொள்கைகளுக்கு விரோதனமானது என்று மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இருப்பினும் அவர் 'மெர்சல்' என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.