1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2022 (12:02 IST)

பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு! – உயர்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழ்நாட்டில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மாநில பாடத்திட்ட பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பொறியியல் படிப்புகள், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை பணி தொடங்கு மும்முரமாக நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் தேதி நேற்றுடன் முடிவடைந்தது. அதுபோல பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி ஜூலை 17 என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது வரை சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகாமல் உள்ளன. இதனால் அவர்கள் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க பொறியியல் பட்டப்படிப்புகள் மற்றும் கலை, அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்குன் தேதி நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சிபிஎஸ்சி மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியானதிலிருந்து அடுத்த 5 நாட்கள் வரை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.